இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

588

Members of the Sri Lankan cricket team playfully pose for a photograph during a practice session ahead of their second test match against Australia in Galle, Sri Lanka, Wednesday, Aug. 3, 2016. (AP Photo/Eranga Jayawardena)

 

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

2015-2016ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதில் 4 பிரிவுகளில் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

முதல் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 1,65,000 டொலர்களும், 2வது பிரிவில் 1,00,000 டொலர்களும், 3வது பிரிவில் 70,000 டொலர்களும், 4வது பிரிவில் 40,000 டொலர்களும் வழங்கப்பட்டன.

ஆனால் தற்போது இந்த ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தத்தில் முன்னதாக வழங்கப்பட்ட ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இது 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவு வீரர்களுக்கு 1,25,000 டொலர்களும், 2வது பிரிவு 80,000 டொலர்களும், 3வது 60,000 டொலர்களும், 4வது பிரிவு 40,000 மற்றும் 5வது பிரிவு 20,000 டொலர்களும் வழங்கப்படுகிறது.

இது தவிர, அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட்டுகள் எடுப்பவர்களுக்கு தனித் தனியாக பரிசுத் தொகை வழங்கப்படும்.

டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை 7,500 டொலர்களில் இருந்து 5,000 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொகை 10,000 டொலர்களாக உயரும்.

இது போல் ஒருநாள் போட்டிகளில் 3,000 டொலர்களும், டி20 போட்டிகளில் 2,000 டொலர்களும் வழங்கப்படுகிறது.

2015-2016ம் ஆண்டில் 16 வீரர்களுக்கு மட்டும் 684.85 மில்லியன் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாம். இது இலங்கை கிரிக்கெட் சபையின் வருவாயில் 33 சதவீதமாகும்.