அவளை உடனே தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் : இளம் பெண்ணுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!!

267

asia-bibi

பாகிஸ்தானில் கடவுளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம்பெண்ணை உடனே தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற இளம் பெண் அந்நாட்டின் பெரும்பான்மை மதக்கடவுளை தவறாகச் சித்தரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் அந்த பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்க மறுத்துவிட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி நீதிமன்றங்களின் முன் ஆசியா பிபியை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.