இலங்கையில் பிரபல்யம் அடைந்து வரும் Renault KWID வாகனத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்த குறித்த வாகன தயாரிப்பு நிறுவத்தினால் 50 ஆயிரம் வாகனங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் நிறப்பும் பகுதியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டமையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
எனினும் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இவ்வாறான கோளாறுகள் இல்லையென இறக்குமதி செய்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மே மாதத்திற்கு முன்னர் இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களே இவ்வாறு மீள கோரப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு அந்த வாகனம் ஜுன் மாதத்திற்கு பின்னரே கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட Renault KWID வாகனங்கள் மீள பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வடிக்கையாளர்கள் குழப்பம் அடையத் தேவையில்லை என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.






