நியுசிலாந்தில் இரு இலங்கையர்களுக்கு 17 வருட சிறைத் தண்டனை!!

422

jail

கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு நியூஸிலாந்து நீதிமன்றம் 17 வருட சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்த இரண்டு பேருக்கும் எதிரான வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி வடக்கு கென்டபெரியில் வைத்து சமீரா மதுரங்கன மெனிக்கே பெத்தலாகே என்பவரை கொலை செய்தமை தொடர்பில் 24 வயதான துவான் பிரவாஸ் ஸவால் மற்றும் 35 வயதான முதியான்சலாகே விராஜ் வசந்த அழகக்கோன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.



பெண் ஒருவரின் விவகாரம் தொடர்பிலேயே இந்த கொலை இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்தது. கொலை சம்பவம் இடம்பெற்ற பின்னர் கொலை செய்யப்பட்டவரை, குறித்த இருவரும் தீயிட்டு கொளுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.