யாழ் தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், குறித்த விபத்து காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து தாமதமானது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்டவேளையில் கே .கே .எஸ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த இரு வாகனங்களின் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







