லண்டன் சிட்டி விமான நிலையத்தில் இரசாயன தாக்கம் : பயணிகளிடையே பதற்றம் : விமான நிலையம் மூடல்!!

512

 
லண்டன் சிட்டி விமான நிலையத்தில் இரசாயனதாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பிரிட்டிஷ் எயர்வெயஸ் ஊழியர் 5 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களின் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 26 பேர் அம்பியுலன்ஸ் வைத்திய சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், விமான நிலையமும் அவசரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுகின்றன.

12 13 14