15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு : சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!

517

abuse

மட்டக்களப்பு, புன்னைச்சோலையில் நேற்று 15 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதேயிடத்தைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை விஜேகாந்த என்பவரை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையென்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளித்த பின்னர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இதன்போது உத்தரவிட்டுள்ளார்.