வவுனியாவில் போலி நாணயத்தாள் வைத்திருந்தவர் கைது!!

811

money

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள் வைத்திருந்த ஒருவர் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து நான்கு போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.



மேலதிக விசாரணைக்காக சந்தேகநபரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.