பெற்ற மகனை 20 வருடங்களாக கொடுமைப்படுத்திய தந்தை!!

520

tor

தன் மகன் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் 20 ஆண்டுகளாக ஒரு இருட்டறையில் பூட்டி வைத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Amancio de Andrade, இவரின் மகன் Armando (36). Amancio வீடிருந்த பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வர அவர்கள் அங்கு எல்லா வீடுகளையும் சோதனை செய்துள்ளனர்.

அப்போது Amancio வீட்டை சோதனை செய்த போது அங்குள்ள கீழ் தளத்தில் உள்ள ஒரு இருட்டறையில் Armando கட்டிலில் கயிறை கொண்டு கட்டிவைக்கப்பட்டுள்ளதை பொலிசார் பார்த்து அவரை மீட்டுள்ளனர்.

அவர் 20 வருடங்களாக அவர் அந்த அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது பற்றி ஒரு பொலிஸ் அதிகாரி கூறுகையில், நாங்கள் போதை பொருட்கள் கடத்தல் பற்றி சோதனை செய்ய அந்த வீட்டின் அறைக்குள் நுழைந்த போது அங்கு Armando கட்டப்பட்ட நிலையில் இருந்தார். அவர் நகங்கள் அதிக அளவில் வளர்ந்து அவருக்கு தாடியும் அதிகமாக இருந்தது.

நாங்கள் அவரை மீட்ட போது அவர் மிகவும் பலவீனமாக காணப்பட்டார் மற்றும் ஒருவித மன பிரம்மையுடனே இருந்தார். அவரை தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என கூறியுள்ளார்.

Armando பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் கூறுகையில், Armando எல்லாரிடமும் பழகக்கூடியவன். அவனை கடந்த 20 வருடங்களாக காணவில்லை.

அவர் தந்தையிடம் கேட்டதற்கு அவன் பிரேசிலில் உள்ள வேறு பகுதியில் வசித்து வருவதாக கூறியதாக தெரிவித்துள்ளனர்.