வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதி இராசேந்திரகுளத்தில் இன்று (31.10.2016) காலை 11.20 மணியளவில் திடீரென இருகடைகள் தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா இராசேந்திரகுளத்தில் அமைந்துள்ள இரு கடைகள் (ஸ்ரூடியோ,பலசரக்கு வாணிபம்) என்பன திடீரென தீப்பற்றியுள்ளது. கடைகள் முடப்பட்டிருந்தமையினால் அயலவர்கள் கடையின் கதவினையுடைத்து தண்ணீருற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குளிரூட்டி, அச்சுப்பிரதி இயந்திரம், கணனி என பல இலத்திரனியற் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது
சேதம் பற்றிய முழுமையான விபரம் இது வரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.






















