வவுனியா உக்குளாங்குளத்திற்கு அடிக்கடி வருகைதரும் முதலைகள் : இன்றும் முதலையொன்று பிடிப்பு!!

806

 
வவுனியா உக்குளாங்குளத்தில் இன்று(31.10.2016) அதிகாலை 1.30 மணியளவில் முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நேற்று 30.10.2016 மாலை பெய்த கடும் மழை காரணமாக நெளுக்குளம் குளத்திலிருந்து முதலையொன்று இன்று (31.10.2016) அதிகாலை 1.30 மணியளவில் உக்குளாங்குளம் பிரதேசத்திக்குள் நுழைந்துள்ளது.

இம் முதலையினை சில மணிநேரப் போராட்டத்தின் பின்னர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25.10.2016 அன்றும் உக்குளாங்குளத்தில் முதலையொன்று பிடிபட்டமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0689 dsc_0690 dsc_0691 dsc_0692 dsc_0693 dsc_0694 dsc_0695 dsc_0696