வவுனியாவில் நேற்று(02.11.2016) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
நேற்று வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியிலில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (03.11.2016) காலை அப்பகுதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் வவுனியா புதியவேலர் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான நாகேந்திரன் சுகந்தினி என்ற இளம் தாயும் இவரது 3 வயது மகனுமாகவும்.
நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனமொன்றில் பெற்ற கடன் தொடர்பில் கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இளம் தாய், தனது இரண்டரை வயதுடைய குழந்தையுடன் குறித்த நிதி நிறுவனத்திற்குச் செல்வதாகத் தெரிவித்து வீட்டில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இதன்போது தனது 5 வயது மகனையும் அழைத்தபோதிலும், சிறுவன் தனது தந்தையுடன் நிற்பதாக தெரிவித்ததை அடுத்து 3 வயதுக் குழந்தையும் இளம் தாய் வெளியில் சென்றுள்ளார்.
எனினும் இருவரும் இரவாகியும் வீட்டிற்கு வராத நிலையில் அயலவர்களின் உதவியுடன் குறித்த பெண்னின் கணவனும் இணைந்து மனைவியையும் பிள்ளையையும் தேடியுள்ளனர்.
இதன்போதே சின்னக்குளம் கிராமத்தின் அயல்கிராமமான பன்றிக்கெய்தகுளம் கிராமத்தின் பின்புறமாக உள்ள பாழடைந்த கிணறொன்றில் இருந்து இருவரது சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ள
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.




















