செப்டம்பர் மாத ராசி பலன்கள் – மேஷம்!!

1129

mesha

மேஷத்தான் தைரியன் என்பதற்கேற்ப அனைத்து இடத்திலும் தைரியத்தை வெளிப்படுத்தும் மேஷ ராசி அன்பர்களே ராசியில் கேது ராசிநாதன் செவ்வாயுடனும் குரு தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். பாக்கியஸ்தானத்தை குருவுடன் பார்க்கிறார். தன வாக்கு குடும்பாதிபதி சுக்கிரன் ஆறாமிடத்தில் நீசமானாலும் அவரை ராசிநாதன் பார்ப்பதால் உக்ரம் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். சனியும் ராகுவும் களத்திர ஸ்தானத்தில் இருந்து சிற்சில குழப்பங்களை விளைவித்தாலும் குரு தனது பஞ்சம பார்வையால் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். தைரிய வீர்ய ஸ்தானாதிபதி புதன் அந்த ஸ்தானத்திற்கு மூன்றாம் இடத்தில் இருப்பதால் தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம் எச்சரிக்கை.

களத்திர ஸ்தானத்தில் இருக்கும் ராகுவுடன் சனி இருப்பதால் தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். தொழிற்ஸ்தானத்தை ராசிநாதன் பார்ப்பதால் சுபச்செலவுகள் நிகழும். சேமிப்புகள் அதிகரிக்கும். சனி பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவுக்கு எந்த குறையும் இருக்காது.

உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் அனுசரனையாக இருப்பார்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வரும். மாணவ மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மாத முற்பகுதி மிகுந்த உற்சாகமாக இருக்கும். பிற்பாதி கவனமுடன் இருக்க வேண்டி வரும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் தும் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் சாற்றி அர்ச்சனை செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 ஆகிய தேதிகளில் வீண் விவாதம் வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வளர்பிறை : ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி;
தேய்பிறை : ஞாயிறு, வியாழன், வெள்ளி.