செப்டம்பர் மாத ராசி பலன்கள் – கன்னி!!

861

kanni‘‘கன்னியான் தர்மவான்’’ என்பதற்கேற்ப அனைத்து சூழ்நிலைகளிலும் தர்மம் தவறாத கன்னி ராசி அன்பர்களே ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் விரய ஸ்தானத்திலும் பின் ராசியிலும் மாறுகிறார். தனஸ்தானாதிபதி ராசியில் நீசமாக இருந்தாலும் நீச பங்க ராஜ யோகம் ஏற்படுகிறது. தனஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்களைத் தருவார். பணம் வரும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். சனி சாதகமற்ற பலன்களைக் கொடுத்தாலும் குருவின் பார்வை நன்மை செய்யும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் ராசியைப் பார்க்கும் செவ்வாயால் சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.

சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். ஏழரைச் சனியின் கடைசி காலகட்டத்தில் இருந்தாலும் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பண வரவும் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம்.

மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். தொழில் ஸ்தான குருவின் தனஸ்தான பார்வையினால் பொதுவாகச் சொல்லவேண்டுமானால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீமஹாநாராயணாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : விநாயகருக்கு மரிக்கொழுந்து சாத்தி வணங்கவும்.

சந்திராஷ்டம தினங்கள் :  22, 23 ஆகிய திகதிகளில் அவசர முடிவுகள் எதுவும் எடுக்காதீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
தேய்பிறை  : புதன், வெள்ளி.