யாழ் ஹோலி பண்டிகைக்கும் இந்தியத் தூதரகத்திற்கும் தொடர்பில்லை : இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா!!

1068

India Holi Festival

யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஹோலி பண்டிகைக்கும் இந்திய துணை தூதுரகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஹோலி பண்டிகை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் ஹோலி பண்டிகையொன்றை ஏற்பாடுசெய்திருந்தது தொடர்பில் தமிழர் தரப்பால் கடும் கவலையும், ஆத்திரமும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நேற்று அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜா, இந்திய தூதுரகத்துக்கும் ஹோலி களியாட்ட நிகழ்விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.