ஆர்டிக் கடலுக்கடியில் மர்ம ஓசை : ஆராயும் கனடா இராணுவம்!!

409

sea

ஆர்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை கனடாவின் இராணுவத்தினர் ஆய்வு செய்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில் ஃபியுரி மற்றும் ஹெக்லா நீரிணை முழுவதும் பல மாதங்களாக இந்த ஓசை கேட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

திமிங்கலம் மற்றும் சீல் எனப்படும் நீர் நாய்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களை இந்த ஒலி அப்பகுதியில் இருந்து விரட்டியதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை கனடாவின் இராணுவ விமானங்கள் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.

ஆனால், “ஒலி ரீதியான முரண்பாடு” என்று அவர்களால் விபரிக்கப்படும் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.