வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் க.உ. வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா 09.11.2016 புதன்கிழமையன்று பாடசாலையின் அதிபர் திரு . கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி புதிய கட்டிட தொகுதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு .வை.ஸ்ரீஸ்கந்தராஜாவும் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர் .
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 2016 ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாண்ட வாத்திய கருவியும் வட மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா , இந்திரராஜா ஆகியோரது நிதியிலிருந்து தளபாடங்களும் மின் இணைப்புக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .சிவசக்தி ஆனந்தன் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா ,இ.இந்திரராஜா வவுனியா வடக்கு வலய பணிப்பாளர் திரு .வை.ஸ்ரீஸ்கந்தராஜா திட்டமிடல்பணிப்பாளர் திருமதி தே.உமாதேவன் மற்றும் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.