இலங்கைக்கு அருகில் வரும் சூப்பர் மூன் இன்று இரவு காண தவறாதீர்கள்!

792

asd1

? இன்றிரவு கடந்த 68 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த முறை நிலா, மிக அருகில் தெரியும். 68 ஆண்டுகளுக்கு பின் வரும் இந்நிலவு, 30 சதவீதம் அதிக ஒளியுடனும், வழக்கமான நிலவைவிட இன்று தோன்றும் நிலவு 14 சதவீதம் பெரியதாக நம் கண்களுக்கு தெரியும்.

? இந்த நிகழ்வு கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வந்ததைவிட சிறப்பானதாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

? நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வுக்கு சூப்பர் மூன் எனப் பெயர். சூப்பர் மூன் என்பது முழு நிலவு அல்லது புது நிலவு என அழைக்கப்படுகிறது. இது இன்று 14ம் தேதி பவுர்ணமி நாளில் நடைபெறுகிறது. 68 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் நிலாவை இன்று மக்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

? பூமியைச் சுற்றி வரும் நிலா சுமார் 68 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பு+மிக்கு மிக அருகில் தெரியும்.

? சு+ப்பர் நிலவு நிகழ்வு ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.

? இன்று 30 சதவீதம் கூடுதலான ஒளியுடன் இந்த நிலவு தோன்றும் என்பதால் இன்றைய இரவு மிகவும் வெளிச்சமாக இருக்கும்.

? அதிக ஒளியுடன் இந்த நிலா தெரியும் என்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தோன்றும்.

? இதுபோன்ற சூப்பர் பவுர்ணமி நிலாவை, அடுத்ததாக, 2034ல் தான் பார்க்க முடியும்.

? இந்த அரிய நிகழ்வை தவறவிட்டால் இதனை காண இன்னும் 70 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் !

தவறாமல் பார்த்து மகிழ்ந்திடுங்கள் !!!