முக்கோணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி!!

460

sl

நேற்று இடம்பெற்ற சிம்பாபேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாபே அணி சார்பில் எந்தவொரு வீரரும் அரைச்சதம் கூட பெறவில்லை என்பதோடு, அந்த அணிக்காக பீற்றர் மூர் அதிகபட்ச ஓட்டமாக 47ஐ பெற்றுக் கொடுத்தார்.

இந்தநிலையில் சிம்பாபே 41.3 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப்பிடித்து 154 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் அசல குணசேகர மூன்று விக்கெட்டுக்களையும், நுவன் குணசேகர, சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதற்கமைய இலங்கைக்கு 155 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 24.3 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த நிலையில் 155 ஓட்டங்களை விளாசிய இலங்கை வெற்றியைத் தனதாக்கியுள்ளது.

இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 78 ஓட்டங்களையும் நிரோஷான் டிக்வெல 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.