பல்வேறு நாடுகளின் உயர் தீர்மான மக்கள் தொகை வரைபடங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மலாவி, தென்னாபிரிக்க, கானா, ஹெய்டி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும்.
எதிர்வரும் மாதங்களில் இன்னும் பல தரவுகள் வழங்கப்படும் என பேஸ்புக் இணைப்பு ஆய்வகம் வாக்குறுதி அளித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள கிராம பகுதிகளில் கம்பியில்லா தொடர்பு சேவைகள் தொடங்கும் திட்டத்தில் ஆர்வம் கொண்டுள்ளது.
அதன் முயற்சியின் ஒரு பகுதியாக மக்கள் தொகை வரைபடங்களை பேஸ்புக் இணைப்பு ஆய்வகம், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் உலக வங்கி இடையே ஒரு கூட்டு முயற்சியாக வெளியிடப்பட்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் நண்பர்கள் வணிக ரீதியாக கிடைக்கும் செயற்கைக்கோள் படங்களின் மூலம் கட்டிடங்களை அடையாளப்படுத்தி மென்பொருள்கள், கணக்கெடுப்பு தரவு மற்றும் ஒரு சில பிற ஆய்வு திட்டங்களை பயன்படுத்தி மக்கள் தொகை மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பேஸ்புக் அதன் பூர்வாங்க கண்டுபிடிப்புக்களை, 23 நாடுகளில் ஆய்வு செய்வதற்கு பரிந்துரைத்துள்ளது. குறித்த 23 நாடுகளிலும் நகரத்திற்கு 63 கிலோ மீற்றர் அருகில் 99 வீதமான மக்கள் தொகை வாழ்வதாகவும், 43 வீதமான மக்கள் நகரத்திற்குள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே, போதியளவு உயர் தரவு விகிதங்களில் 63 கிலோ மீற்றருக்குள் தகவல் தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும் என்றால், இந்த 23 நாடுகளில் 99 சதவீத மக்களை இணைக்க முடியும் என Tiecke என்பவர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் செயற்கைக்கோள் உதவியுடன் கிராமப்புறங்களில் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப முயற்சியை கையாண்டு வருகின்றது. அதற்கமைய மக்கள் தொகை வரைபடங்கள் பேஸ்புக்கின் வடிவமைப்பு ஓட்டத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.