மொபைல் போன் பயன்படுத்துபவரா நீங்கள் : இது உங்கள் கவனத்திற்கு!!

641

mobile

மனிதனின் அன்றாட பயன்பாட்டு சாதனங்களுள் முக்கிய இடம் மொபைல் போனுக்கு உரியது . நீரின்றி நாமில்லை என்பது போலதான் செல்போன்கள் இன்றியும் தற்கால மனிதன் இல்லை.

அந்தளவிற்கு மிக துரித கதியில் உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி தனக்கென தனி வரலாற்றேயே உருவாக்கி வைத்துள்ளது.

செல்போன் பாவனை நல்லதுதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையானால் எதிர் காலத்தில் உங்களின் நிலையும் அதோ கதிதான்! தெரியாதவர்களும் தெரிந்துக் கொள்ள இந்த உண்மையை உங்களுக்காக நாங்கள் சொல்லித்தருகிறோம்.

செல்போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகளை கண்டறிந்துள்ளனர். அவற்றுள் சில!
1.நோமோ போபியா (Nomophobia)

நோமோபியா என்பது ஸ்மார்ட் போன் பாவனையால் உருவாகிற மன வியாதியாகும். இந்த சொல், மொபைல் போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த அமைப்பினர் உருவாக்கியுள்ளனர்.

குறித்த சொல் “nomobile phobia” என்பதன் சுருக்கமாகும். மொபைல் போன் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில் நாம் இந்த மன வியாதிக்கு ஆளாகிறோம்.

மொபைல் போன் மூலம் ஒருவரை பலமணி நேரம் தொடர்புகொள்ள முடியாததால் எற்படும் விரக்தியே நோமோ போபியா ஆகும்.

நிபுனர்கள் பலர் மருத்துவர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தவுடன் முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பதுதான் என குறிப்பிட்டுள்ளனர்.

அதுவரை, மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருந்தது அவர்களிடம் இந்த போபியாவினை உண்டாக்கி உள்ளது.
2. ஸ்மார்ட் போன் அடிமை:

நோமோபோபியா மன நிலை தீவிரமாக மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமையாகிறார்.

அதாவது அதீத மெபைல் போன் பாவனையால் ஒருவர் அதன்மீது பைத்தியமாகும் நிலையே இதுவாகும்.

3. தூக்கத்தில் மெசேஜ் டெக்ஸ்ட்

மொபைல் போன் பயனாளர்கள் பலர் தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனர்.

நண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். இதனால், அவர்களின் உறக்கம் தொலைகிறது.

4. ஸ்கிரீன் தரும் தூக்கமின்மை:

மிகப்பெரிய தொடு திரையை கொண்ட தொலைபேசிகளை டச் செய்து விளையாடுவதில் எப்பொழுதுமே ஆர்வம் அதிகம் இருக்கும்.

அந்த வகையில் தூக்கத்தில் கூட மொபைல் போன் பற்றிய நினைவுகளும் அருகில் போன் இருக்கிறதா என்ற சந்தேகமும் தூக்கமின்மையை உருவாக்குகிறது. இதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது.

அதிக வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது. இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் குறைகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும்.

படுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கணினி. மடிக்கணினி. தொலைக்காட்சி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5. ஆமைக் கழுத்து நோய்:

ஸ்மார்ட் போனை அல்லது எந்த மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலானவர்களிடம் இல்லை.

நாம் ஏதேனும் வேலைகளை செய்து கொண்டிருப்பதால், கழுத்து அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்படுத்துவதே இப்போது பழக்கமாகி வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து செய்கையில் ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில் இதனை turtleneck syndrome என அழைக்கின்றனர்.

தொடர்ந்து இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு, கழுத்தில் தீராத வலி உண்டாகிறது. இந்த வலியால் அவதிப்படுவோர் அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியாவாகும்.

7. தன் காதல் மனக் கோளாறு:

சமூக இணைய தளங்களில், பெரும்பாலானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப் பதிக்கின்றனர்.

இது எதற்காக? நோக்கம் என்ன? ஒன்றுமில்லை. இதோ ! என்னைப் பார்” என்று கூறுவதற்காகவே. இது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது.

இவ்வாறான செயற்பாடு மூளை வளர்ச்சியை குறைக்கிறது. அத்தோடு பிற்காலத்தில் நுண்ணறிவு குறைவதற்கும் வாய்ப்பாகிறது.

ஏன் தான் மொபைல் போனை கண்டுபிடித்தோம் என்று அதன் கண்டுபிடிப்பாளர் மார்ட்டின் கூப்பர் கவலை பட்டதனைப் போல ஏன்தான் போன் பாவித்தோம் என்று கவலை படும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள் தோழர்களே.

எதிர்காலத்தில் மொபைல் போனால் சமூகம் சீரழியாமல் இருக்க இப்போதே வழிவெட்டி வைப்போம் ஏனெனில் எதிர்கால உலகமும் நம் கையில்தான்.