வவுனியாவில் 50 பயனாளிகளுக்கான வாழ்வாதாரப் பயிற்சிநெறி!!

1033

 
2016 ம் அண்டிற்கான வட மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் வவுனியா மாவட்ட சமூகசேவைகள் அலுவலகம் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களம் என்பன இணைந்து இன்று (24.11.2016) வியாழக்கிழமை வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் சுமார் 50 பயனாளிகளுக்கான வாழ்வாதாரப்பயிற்சி நெறி ஒன்று நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தித்திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் பிரதம விருந்தினராகவும் வவுனியா மாவட்ட சமூகம் சார் சீர்திருத்த திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் கலீல் முஹமட் நஜீம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

வவுனியா நீதிமன்றத்தால் பல்வேறு குற்றங்களுக்கென தண்டனை வழங்கப்ட்டு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குட்பட்டவர்களின் பொருளாதார ரீதியில் அவர்களை வலுப்படுத்த வாழ்வாதாரப்பயிற்சி நெறிகள் வழங்கப்படவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் நெல் விவசாய நடவடிக்கை, தெங்கு உற்பத்தி செய்கை, கால்நடை வளர்ப்பு தொடர்பான விரிவுரைகள் அறிவூட்டல்கள் வழிகாட்டல்கள் இதில் வழங்கப்பட்டன.

இப்பயிற்சி நெறியில் சமூகசேவைகள் திணைக்களத்தால் அனைவருக்கும் அணுகும் வசதி திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அணுகு வசதியை தமது வீடுகளில் பெற்றுக் கொள்ளும் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில் வளவாளர்களாக கமநல அபிவிருத்தி திணைக்கள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் ஜனாப் பி.ஹிஸ்புல்லா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ச.ரஞ்சனா கால்நடை அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.கிருபைராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி நெறியை வழங்கினர்.

காலை 9.00 மணி தொடக்கம் மதியம் வரை நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் இறுதியில் பங்கு பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

1 news-1-1 news-1-3 news-1-4 news-1-6 news-1-11 news-1-12 news-1-18 news-1-20 news-1-25 news-1-26 news-1-28 news-1-32 news-1-33 news-1-36 news-1-39