வவுனியாவில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!

540

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று (28.11.2016) மதியம் 2.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தினுள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இ.ரீ.சீ.ஏ யை கொண்டுவரும் வரவு செலவை எதிர்ப்போம், மருத்துவர்க்கு தண்டப்பணம் விதிக்கும் வரவு செலவை எதிர்ப்போம், சுகாதாரத்தை தனியார்மயமாக்கும் வரவு செலவை இரத்து செய், என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 20க்கும் மேற்ப்பட்ட வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு வாரத்தில் இதற்குறிய முடிவு கிடைக்கவிட்டால் ஒருவார காலத்திற்கு அரசாங்க சேவையை மாத்திரமின்றி தனியார் சேவைகளையும் நிறுத்தி வைக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.

1 dsc_0078 dsc_0079 dsc_0080 dsc_0082 dsc_0083 dsc_0084 dsc_0086 dsc_0088 dsc_0089 dsc_0090 dsc_0091 dsc_0093 dsc_0094 dsc_0096 dsc_0099 dsc_0100 dsc_0102 dsc_0103 dsc_0105 dsc_0106 dsc_0107 dsc_0108