வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கு வேலி அமைக்க படையினர் தடை!!

570

rambaikulam

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மாகவித்தியலாயத்தின் மைதானத்திற்கு வேலி அமைப்பதற்குச் சென்றபோது அங்கு நிலை கொண்டுள்ள படையினர் தடைவிதித்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 வருடங்களாக படையினர் பயன்பாட்டிலிருந்து வந்த மைதானம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் மைதானத்தினைச்சுற்றி வேலி அமைக்கும் நடவடிக்கையினை பாடசாலை சமூகத்தினரால் மேற்கொண்டபோது மைதானத்திற்கு வெளியே நிலை கொண்டுள்ள படையினர் வேலி அமைப்பதற்கு தடைவிதித்துள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக மைதானம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடிதம் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படையினர் தடைவிதித்துள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதும் மைதான புனரமைப்பு பணிகள், வேலி அமைக்கும் பணிகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.