15 வயதான பிக்குவுடன் குடும்பம் நடத்திய 35 வயதான இரு பிள்ளைகளின் தாய் கைது!!

1447

sad-girl

துற­வறம் பூண்­டி­ருந்த 15 வய­தான இளம் துற­வியை தனது வீட்டுக்கு அழைத்து ­வந்து அவ­ருடன் குடும்பம் நடத்­தி­ய­துடன் அவரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கம் செய்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட 35 வய­தான பெண் ஒருவர் 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

சுது ஹங்ஸி என்ற பெயரில் போலி­யான பேஸ்புக் கணக்­கொன்றை ஆரம்­பித்து அதன்­மூலம் குறித்த இளம் துற­வி­யுடன் அவி­சா­வளை, உடு­வல பிர­தே­சத்தை சேர்ந்த இப்பெண் காதல் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை தெரிய வந்­துள்­ளது.

ஏற்­க­னவே திரு­ம­ண­மான இப்­பெண்­ணுக்கு 6 மற்றும் 9 வய­து­களில் இரு மகள்மார் உள்ள நிலையில் அவ­ரது கணவர் வெளி­நா­டொன்றில் பணி­பு­ரிந்து வரு­கின்றார்.

இந்­நி­லையில் இப்பெண் சுமார் ஒரு மாத­கா­லத்­துக்கு முன்னர் தனது இரு­மகள்­களை அழைத்­துக்கு கொண்டு காத­ல­னான பிக்­குவைச் சந்­திப்­ப­தற்­காக அவர் வசித்­து­வரும் தம்­புள்­ளை­யி­லுள்ள விகா­ரைக்கு சென்­ற­துடன் அங்­கி­ருந்த விகா­ரா­தி­ப­தி­யிடம் குறித்த இளம் பிக்கு தனது சகோ­தரன் எனவும் தெரி­வித்­துள்ளார்.

அன்­றைய தினம் விகா­ரையின் மடத்தில் தங்­கி­ய­துடன் இரவு 1 மணி­ய­ளவில் பிக்­குவை அழைத்துக் கொண்டு தெஹி­யோ­விட்ட பிர­தே­சத்­திலுள் தனது வீட்­டுக்கு சென்று கணவன் மனை­வி­போல வசித்து வந்­துள்ளார்.

அதன்­போது இப்­பிக்கு சந்­தேக நப­ரான பெண்­ணிளால் கடு­மை­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்­கையில், அப்பெண் தன்னைத் தவிர மேலும் சில­ரு­ட­னுடன் தொடர்­பு­களை பேணி­வ­ரு­வ­தாக அறிந்­து­கொண்ட பிக்கு அப்­பெண்­ணுக்குத் தெரி­யாமல் அங்­கி­ருந்து சென்று அவி­சா­வளை நக­ரி­லுள்ள உண­வ­க­மொன்றில் பணி­யாற்றி வந்­துள்ளார்.

எனினும், இளம் பிக்­குவின் பேஸ்புக் காதலி, அவரை தேடிக்­கண்­டு­பி­டித்து சீதா­வக்கை பிர­தே­சத்தில் தான் பணி­யாற்­றி­வரும் ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் அவ­ருக்கு தொழிலை பெற்­றுக்­கொ­டுத்­த­துடன் பணி­நே­ரங்­க­ளிலும் பிக்­கு­விடம் சில்­மி­ஷங்­களை புரிந்து வந்­துள்ளார்.

இதனால் கோப­ம­டைந்த குறித்த அந்தப் பிக்கு அப்பெண் பணி­நி­றை­வ­டைந்து வீட்­டுக்கு சென்று கொண்­டி­ருந்த போது கடு­மை­யாக தாக்­கி­ய­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

பிக்கு கணவன் தன்னை தாக்­கி­ய­தாக இப்பெண் அவி­சா­வளை பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறைப்­பாடு செய்­துள்ளார்.

பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் அப்­பெண்ணை தாக்­கிய அவரின் கணவர் 15 வயது சிறு­வ­னென தெரியவரவே முறைப்பாட்டாளரான பெண் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் நேற்றுமுன்தினம் அவிசாவளை நீதிவான் மன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மீண்டும் டிசம்பர் 6 ஆம் திகதி மன்றில் ஆஜரானுமாறு உத்தரவிடப்பட்டது.