17 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்!!

505

Cellphone, selective focus, canon 1Ds mark III

17 வய­தான பாட­சாலை மாணவர் ஒரு­வரை பாலியல் தொல்­லைக்கு உட்ப­டுத்­தி­ய­தாக கூறப்­ப டும் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையைச் சேர்ந்த உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நப­ரொ­ரு­வ­ரினால் நுகே­கொடை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

குரு­ணாகல் பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றில் கல்வி கற்­று­வரும் 17 வய­தான மாணவர் ஒருவ­ருக்கு தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­ச­பையில் பணியாற்றிவரும் நப­ரொ­ரு­வ­ரினால் குறுந்த­கவல் மற்றும் தொலை­பேசி அழைப்­பு­களின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்­தமை தொடர்பி­லேயே இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக நுகே­கொடை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார­ ச­பை­யினால் நடத்­தப்­பட்ட விவாத போட்­டி­யொன்றில் மேற்குறிப்பிட்ட மாணவன் உள்­ளிட்ட குழு­வினர் கலந்து கொண்­டி­ருந்­த­போது சந்­தேக நபர் அவர்­க­ளது தொலை­பேசி இலக்­கங்­களை பெற்­றுள்ளார்.

அதன்­பின்னர் அவர் குறித்த மாண­வ­னுக்கு தொடர்ந்தும் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டும் பாலியல் தொடர்­பான குறுந்­த­கவல் அனுப்­பியும் தொல்­லை­களைச் செய்­த­தாக விசா­ர­ணை­க­ளில் ­தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த நப­ரினால் குறித்த மாண­வ­னுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்­டம்பர் மாதங்­களில் 160க்கும் அதி­க­மான குறுந்­த­க­வல்­கள் அனுப்­பப்­பட்­டுள்­ளமை மற்றும் தொலை­பேசி அழைப்­பு­க­ள் மேற்கொள்ளப்பட்­டமை தொடர்பில் பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளனர்.

பொலிஸார் முன்­வைத்த சான்­று­களை கருத்தில் கொண்ட நுகே­கொடை நீதிவான் மன்றின் பிர­தம நீதிவான், அம் மாண­வனின் கைத்தொலைபேசியை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பிவைத்து அதன் அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.