சுமத்ரா தீவுக்கு அருகில் பாரிய நிலஅதிர்வு : 20 பேர் பலி!!

915

earthquake

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் பாரிய நில அதிர்வொன்று இன்று காலை ஏற்பட்டுள்ளது.

6.5 ரிக்டர் அளிவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதென இந்தோனேஷியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சுமத்ராவின் அச்சே மாநிலத்திற்கு அருகிலேயே இந்த நில அதிர்வு உணர்ப்பட்டுள்ளது.

குறித்த நில அதிர்வின் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு பாதிப்பேற்பட்டுள்ளன. எனினும் இந்த நில அதிர்வு காரணமாக சுனாமி அவதானம் ஏற்படவில்லை.

இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.