அந்தமானில் புயல், மழையால் மின்சாரம் துண்டிப்பு : 1400 சுற்றுலாப்பயணிகள் நிர்க்கதி!!

726

anthaman

அந்தமான் தீவில் புயல் மற்றும் கன மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுகள் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே ஹெவ்லாக், நீல் தீவுகளுக்கான படகுப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், ஹெவ்லாக் தீவில் 1,400 சுற்றுலாப்பயணிகள் நிர்க்கதியாகியுள்ளனர்.

வானிலை மோசமாக இருப்பதால், சுற்றுலாப்பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.