இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆணுறுப்பை வெட்டித் துண்டாக்கியுள்ளார். கடந்த 10 வருடங்களாக தான் பாலியல் உறவில் ஈடுபட்டதால் ஏற்பட்ட விரக்தியே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காசிராம் எனும் நபரே இந்த விபரீத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 37 வயதான காசி ராமுக்கு 18 வருடங்களுக்கு முன் திருமணமாகி தனது மனைவியுடன் குடும்பம் நடத்துகிறார்.
இத் தம்பதிக்கு ஒரு மகளும் இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், அண்மை யில் மதுபோதையுடன் தனது வீட்டுக்கு வந்த காசி ராம், தனது ஆணுறுப்பை துண்டித்துக்கொண்டார்.
பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு தனது மனைவியை தான் அழைத்ததாகவும் இதற்கு மனைவி மறுப்புத் தெரிவித்ததால், தான் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டதாகவும் காசி ராம் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 வருட காலமாக தான் பாலியல் உறவில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், காசி ராம் கூறுவதை அவரின் மனைவி மறுத்துள்ளார். “அவர் ஒவ்வொரு நாள் இரவிலும் மதுபோதையுடன் வீட்டுக்கு வருவார்.
நான் கூறுவதை அவர் கேட்பதில்லை. என்னைப் பற்றி அவர் அக்கறை கொள்வதுமில்லை” என காசி ராமின் மனைவி தெரிவித்துள்ளார். “அவர் மதுபோதையுடன் வீட்டுக்கு வந்ததாலேயே உறவுக்கு நான் மறுத்தேன்.
அவர் மீது நான் கடும் கோபத்தில் இருந்தேன். நான் எந்தத் தவறும் செய்யாத போதிலும் தற்போது அவர் என் மீது குற்றம் சுமத்துகிறார்” எனவும் காசி ராமின் மனைவி தெரிவித்துள்ளார்.







