வவுனியாவில் பிறிதொரு நபருக்காக சாதாரணதரப் பரீட்சை எழுதிய ஆசிரியர் கைது!!

653

வவுனியா – உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக சாதாரண தரப்பரீட்சை எழுதிய அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மின்சாரசபையில் பணியாற்றும் ஒருவருக்கு சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக அனுமதியட்டை கிடைத்திருந்தது.

எனினும் இவருக்கு பதிலாக சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமைபுரியும் ஆசிரியர் ஒருவர் பரீட்சை எழுதியுள்ளார்.

பரீட்சைக்கான அனுமதி கிடைத்த நபர், குறித்த பாடசாலை ஆசிரியருடன் ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டு பரீட்சையில் தோற்றச்செய்துள்ளார்.

இந் நிலையில் குறித்த நபர் மீது பரீட்சை மேற்பார்வையாளர்கள் சந்தேகம் கொண்டு பரிசோதித்தபோது பிறதொருவருக்காக பரீட்சை எழுத்தியமை தெரியவந்துள்ளது.

நேற்று கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை இன்று பிற்பகல் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 16.12.2016 வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.