வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய கனடா கிளை ஒன்றுகூடல்!!

724

 
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய கனடா கிளை பெருமையுடன் மிகவும் வெற்றிகரமாக நடத்திய 2016ஆண்டின் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏராளமான விருந்தினர்கள் பங்குபற்றிய விழாவாக நடந்தேறியது.

பழைய மாணவிகள் மிகவும் சுறுசுறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்தி சென்றவிதம் மிகவும் பெருமைகொள்ள வைத்தது. வள்ளுவர் கூறியது போல “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”. எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

வள்ளுவர் கூறியது போல மாணவிகள் யாவரும் தங்களது பொறுப்பினை பெருமை சேர்க்கும் விதத்தில் மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்தமை விழாவின் வெற்றிக்கு வழிசமைத்தது. பலர் குடும்ப சகிதமாக வந்திருந்தமை பாராட்டுதல்களுக்குரியதாகும்.

ஏராளமான வர்த்தக பிரமுகர்கள் இந்த விழாவின் வெற்றிக்கு முழுமையான நிதி அனுசரணையை வழங்கியிருந்தார்கள். நடந்த நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டு அனைவரினதும் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டது.

சகல பங்குபற்றிய அங்கத்தவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில் பொருட்களும் வழங்கப்பட்டன. நடனம், சங்கீதக் கதிரை, பேச்சுப்போட்டி, பாடல் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான ஏராளமான போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்று விருந்தளித்தது.

பரிமாறிய உணவு வகைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. அனுசரனையாளர்கள் சிறப்பான முறையில் கௌரவிக்கப்படடார்கள். ஊடகவியலார்கள் பலத்த கரகோசத்தின் மத்தியில் தங்க பட்டி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படடார்கள். இறுதியில் மாணவிகள் அனைவரும் சேர்ந்து குழுரீதியிலான புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.