திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் ஒருவருக்கு சொந்தமான பேரூந்து சிவன் கோயிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பேரூந்து முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த 02 ஆம் திகதி நள்ளிரவு திருகோணமலை கண்டி வீதி 4 ஆம் கட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு தனியார் பேரூந்தும் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






