இலங்கை இளைஞர் ஒருவர் மலேசியாவில் மரணம்!!

1125

மலேசியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலம் இன்று (16) இலங்கையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வீதி, தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு எனும் முகவரியை சேர்ந்த சந்திரன் சிறிஸ்கந்தராஜா (வயது 23) என்பவரே இவ்வாறு மலேசியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இன்றைய தினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இளைஞரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

மலேசியாவில், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் டிசம்பர் 10ஆம் திகதி இரவு தொலைப்பேசி அழைப்பு மூலம் இறந்த தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.