இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் : பிரியா மணி!!

655

priyamaniபருத்தி வீரன் படத்தில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் நவநாகரிக வேடங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவர் ப்ரியா மணி. இவர் சமீப காலமாக பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே நடித்து வருகின்றார்.

இது ஏதாவது உணர்வுபூர்வமான முடிவா என்று அவரிடம் கேட்டபோது என்னை வைத்துப் படம் பண்ணும் இயக்குனர்களிடம் தான் அதனைக் கேட்கவேண்டும் என்று கூறி சிரித்தார். பெரிய ஹீரோக்களுடனும், மசாலாப் படங்களிலும் நடித்துள்ளதாகத் தெரிவித்த ப்ரியா மணி கதையம்சம் பிடித்திருந்தால் தான் தேர்வு செய்வதாகக் கூறினார்.

ஆயினும், தொடர்ந்து இது போன்ற படங்களில் நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும், மாறுதலான மசாலாப் படங்களிலும் நடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது இன்னும் இரண்டு வருடங்களில் தனக்குத் திருமணம் நடக்கலாம் என்று ப்ரியா மணி கூறினார்.

ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும் என்கிறார். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்ற ப்ரியாமணி திருமணம் என்பது பெரிய முடிவாகும், அதை எளிதாகத் தீர்மானிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.