சைக்கிள் திருடிய அவுஸ்திரேலிய ஜோடிக்கு இந்தோனேஷியாவில் விசித்திர தண்டனை!!

532


இந்­தோ­னே­ஷி­யாவில் துவிச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை திரு­டி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட அவுஸ்­தி­ரே­லிய ஜோடி­யொன்று, தமது குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளும் வாசகம் அடங்­கிய பதா­கை­யுடன் வீதியில் வலம்­வந்­தனர்.

இந்­தோ­னே­ஷி­யாவின் பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி தீவுக்கு அரு­கி­லுள்­ள­கிலி ட்ரவான்கான் எனும் தீவில் துவிச்­சக்­கர வண்­டி­யொ ன்றைத் திரு­டி­ய­தாக அவுஸ்­திரேலி­யாவைச் சேர்ந்த ஆண் ஒரு­வரும் பெண் ஒரு­வரும் குற்றம் சுமத்­தப்­பட்­டனர்.

இவர்கள் சைக்­கி­ளொன்றை திரு­டு­வது கண்­கா­ணிப்பு கெம­ராவில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. அதை­ய­டுத்து, இவர்கள் மேற்­படி பதா­கையை கழுத்தில் மாட்­டி­ய­வாறு வீதி­களில் வலம் வந்­தனர்.

“நான் திருடன். நான் செய்­ததை நீங்கள் செய்­யா­தீர்கள்” என அதில் எழு­தப்­பட்­டி­ருந்­தது. ட்ரவான்கான் தீவில் சுழி­யோடல் நிலை­ய­மொன்றை நடத்தும் , ஒருவர் இது தொடர்­பாக, குற்றம் புரிந்­தோ­ருக்கு உள்ளூர் காவல் துறை­யி­னரால் இத்­த­கைய தண்­டனை அளிக்­கப்­ப­டு­வது வழக்கம் எனக் கூறி­யுள்ளார்.

“இது ஒரு சிறிய தீவு, பொலி­ஸாரின் பிர­சன்னம் குறைவு, உள்ளூர் மக்கள் இணைந்து உள்ளூர் பாது­காப்புப் படை­யொன்றை ஸ்தாபித்­துள்­ளனர். இந்­தோ­னே­ஷிய பெரு நிலப்­ப­ரப்­பி­ரி­லுள்ள அரச அதி­கா­ரி­களால் இப்­படை நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது” எனவும் அவர் தெரி­வத்­துள்ளார்.

சுமார் ஒரு வரு­ட­மாக அங்கு தங்­கி­யுள்ள மைக் என்­பவர் இது தொடர்­பாக கூறு­கையில், திருட்டுக் குற்­றங்­க­ளுக்கு இத்­த­கைய தண்­டனை அளிக்­கப்­ப­டு­கி­றது. 7, 8 தட­வைகள் இது போன்று நடந்ததை நான் கண்டுள்ளேன். உல்லாசப் பயணிகள் மாத்திரமல்லாமல் உள்ளூர்வாசிகளுக்கும் இத் தண்டனை அளிக்கப்படுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.