இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 75 ஒட்டங்களால் இந்திய அணி வெற்றி!!

436

ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ஒட்டங்களால் வெற்றி கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 4-0 எனும் கணக்கில் இந்திய அணியின் வசமானது.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கும் நோக்குடன் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களுடன் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது.

அலிஸ்டயர் குக் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் ஜோடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியதோடு, 103 ஓட்டங்களைப் பெற்ற வேளையில், இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அலிஸ்டயர் குக் 49 ஓட்டங்களுடன் வெளியேற, கீட்டன் ஜென்னிங்ஸும் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த இங்கிலாந்து துடுப்பாட்ட வீர்ரகள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற்றத்தை எதிர்க்கொண்டனர்.

அணியின் அதிகபட்ச ஓட்டமாக கீட்டன் ஜென்னிங்ஸ் பெற்ற 54 ஓட்டங்கள் மாத்திரமே பதிவானதோடு இங்கிலாந்தின் ஏனைய 07 துடுப்பாட்ட வீரர்களும் 20 க்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்ததோடு, 07 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் லியம் டொவ்சன் தெரிவு செய்யப்பட்டதோடு, இந்தப் போட்டியில் முச்சதம் கடந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய கருண் நாயர் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதிற்கு பாத்திரமானார்.