சமகாலத்தில் ஐரோப்பா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தலைநகர் கொழும்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பில் பல வான் உயர்ந்த கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டு இலங்கையில் நிர்மானிக்க எதிர்பார்த்துள்ள உயரமான கட்டிடம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்படடுள்ளது.
117 மாடிகளை கொண்ட குறித்த கட்டிடமானது 625 மீட்டர் உயரம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கபடவுள்ளதாக கூறப்படுகின்றது.
முழுமையான கொழும்பு நகரம் போன்று கடலும் அழகாக தெரியும் வகையில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த கட்டிடத்தில் நட்சத்திர ஹோட்டல், வீட்டுத்தொகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட பொருளாதார கேந்திர நிலையத்திற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.
எவ்வாறாயினும், குறித்த கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு முடியும் பட்சத்தில் இலங்கையில் மிக உயரமான கட்டிடமாகவும், உலகின் 9வது உயரமான கட்டிடமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.