42 வருடங்களுக்குப் பின்னர் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்!!

494

1974 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2 இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்திலும் ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

1974 ஆம் ஆண்டு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான பிஷன் சிங் பேடி மற்றும் பகவத் சந்திரசேகர் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.

அதன் பிறகு, தற்போதுதான் இந்தியர்கள் இருவர் அந்த இடத்தைப் பிடித்துள்ளனர்.

சென்னை டெஸ்ட் போட்டியில் 2 ஆவது இன்னிங்ஸில் 7/48 என்று இங்கிலாந்தை எதிர்கொண்ட ஜடேஜா, தொடரில் 26 விக்கெட்டுக்களை 25.84 என்ற சராசரியில் எடுக்க, அஸ்வின் 28 விக்கெட்டுக்களை 30.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கையின் ரங்கன ஹேரத் மூன்றாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.