60 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நுழையும் கார்!!

414

ஜப்பானின் பிரபல கார் நிறுவனமான நிசானின் இந்திய தயாரிப்பான Datsun கார்கள் ஆறு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது.

இலங்கையில் உத்தியோகபூர்வ புதிய Datsun காட்சியறை அதிகாரப்பூர்வமாக, Datsun மற்றும் அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் (AMW) இரண்டின் பிரதிநிதிகளின் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் நாடு முழுவதும் ஏழு நகரங்களில் Datsun கார்களின் விற்பனையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், இந்த நிறுவனத்தின் சமீபத்திய வரவான Datsun – Redi-GO கார்களின் விற்பனை முன் வெளியீட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது 300 Datsun Redi-GO கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. காரின் விலைகளுக்கு 10 சதவீத பங்குகளே இலங்கையின் சந்தை பிரிவிற்கு கொடுக்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 1957 ஆம் ஆண்டு Datsun உத்தியோகபூர்வமாக இலங்கை சந்தையில் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.