டொலரின் பெறுமதி 160 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்!!

379

அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கையில் பாரிய நிதி நெருக்கடி நிலை ஏற்பட கூடும் என கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படுகின்ற நிதி நெருக்கடி நிலைமை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டொலரின் பெறுமதி 160 ரூபா வரை அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த இரண்டினையும் தடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் 1300 கோடி பணத்தை 5000 ரூபாய் நாணய தாள்களாக மத்திய வங்கியிலிருந்து கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பணம் ஜனாதிபதி தேர்தல் கூட்டங்களில் கலந்துக் கொண்டவர்களுக்கு வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அது முற்றிலும் போலியான தகவல் எனவும், அதனை உத்தியோகபூர்வமாக நிரூபிக்க வேண்டும் எனவும் நிதி அமைச்சருக்கு அவர் சவால் விட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நிலைமைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.