ஹப்புதளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஹிய உடவேரியா தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நேற்று (21.12) மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடவேரியா தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் சுப்ரமணியம் எனும் 32 வயது மதிக்கத்தக்க 04 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
விறகு சேகரிப்பதற்கென சென்றவர் அங்கு மரத்தின் கிளையொன்றினை வெட்டி இழுக்க முயற்சித்த போது அவ் மரக்கிளையானது மின்சாரக்கம்பியில் பட்டதால் உடலில் அதி சக்தி வாய்ந்த மின்சாரம் தாக்கியதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தொழிலாளியின் சடலம் பிரேத பிரசோதனைக்காக பொரலாந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹப்புதளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.