உடல் வளர்ச்சியில்லாததால் பிளாஸ்ரிக் கூடையில் வசித்த 19 வயதான நைஜீரிய யுவதி காலமானார்!!

385

கை, கால்கள், முறை­யாக வளர்ச்­சி­ய­டை­யா­ததால் பிளாஸ்திக் கூடை­யொன்றில் அமர்ந்­த­வாறு வசித்து வந்த 19 வய­தான யுவ­தி­யொ­ருவர் கடந்த ஞாயி­றன்று உயி­ரி­ழந்துள்ளார்.

நைஜீ­ரி­யாவின் கெனோ எனும் கிரா­மத்தை சேர்ந்த ரெஹ்மா ஹருனா எனும் இவர் பிறக்கும் போது ஆரோக்­கி­ய­மா­னவர் போன்றே தென்­பட்டார்.

ஆனால், 6 மாத குழந்­தை­யாக இருந்­த­போது அவரின் உடல் வளர்ச்சி திடீ­ரென நின்­றது. அரி­தான நோய் ஒன்றின் கார­ண­மாக ரெஹ்­மாவின் உடல் வளர்ச்சி பாதிக்­கப்­பட்­டது. அவரின் கைகள், கால்கள் இயங்­க­வில்லை. இதனால், பதின்மர் வய­தான போதிலும் ரெஹ்­மாவை பிளாஸ்திக் கூடையில் வைத்தே அவரின் பெற்றோர் பரா­ம­ரித்­தனர்.

ரெஹ்­மா­வுக்கு தம்மால் முடிந்­த­வரை அவர்கள் துணை­யாக இருந்­தனர். பிளாஸ்திக் கூடையில் வைத்து கிராமம் எங்கும் அவரை அழைத்துச் சென்­றனர்.

தனது உடல்­நி­லைக்கு மத்­தி­யிலும் ரெஹ்மா மகிழ்ச்­சி­யா­ன­வ­ராக காணப்­பட்டதுடன் 10 வய­தான தனது இளைய சகோ­த­ர­னுடன் அவர் நெருக்­க­மா­ன­வ­ராக இருந்தார்.

தினமும் ரெஹ்­மாவை தான்­ வீட்­டி­லி­ருந்து வெளியே அழைத்துச் சென்­ற­தாக அவரின் சகோ­தரன் பஹாத் தெரி­வித்­துள்ளார்.

“எனது பெற்றோர் மிகவும் உத­வு­கின்­றனர். எனக்குத் தேவை­யா­ன­வற்­றை­யெல்லாம் அவர்கள் வழங்­கு­கின்­றனர் ” என இவ்­வ­ருட முற்­ப­கு­தியில் ரெஹ்மா ஹருனா தெரி­வித்­தி­ருந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ரெஹ்மா உயிரிழந்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.