இலங்கையில் வாழும் 170 வயதான முதியவர்?

516

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

முதியோர்களுக்கான தேசிய சபையினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டையின் அடிப்படையில் இந்த வயதெல்லை வெளியாகி உள்ளது.

தெல்தோட்டையில் வசிக்கும் முதியவர் ஒருவர் 1847.08.30 இல் பிறந்துள்ளார். இதன் அடிப்படையில் இவருக்கு தற்போது 170 வயதாகின்றது.

உண்மையில் 1946.09.30 ஆம் திகதி பிறந்த இவருக்கு, முதியோருக்கான தேசிய சபையினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையில், இவ்வாறு தவறுதலாக பதிவிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், சிறு வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனக்கு உதவும் பொருட்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையிலேயே இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளதால்,அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் குறித்த அடையாள அட்டையில் காணப்படும் பிழை சீர்செய்யப்படும் நிலையில் குறித்த அடையாள அட்டை, மேலும் பிரயோசனமானதாக அமையும் என இவர் தெரிவிக்கின்றார்.