பறந்­து­ கொண்­டி­ருந்த ஹெலி­யி­ருந்து நபர் ஒரு­வரை வெளியில் தள்ளி கொலை செய்தேன் : பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி!!

578

பறந்­து­கொண்­டி­ருந்த ஹெலி­கொப்டர் ஒன்­றி­லி­ருந்து நபர் ஒரு­வரை தான் வெளியே தள்ளி கொன்­ற­தாக பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­றிகோ டுவார்ட்டே கூறினார் என பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பிலிப்­பைன்ஸில் போதைப் பொருள் கடத்­தல்­கா­ரர்கள், விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக அதி­ரடி நடவடிக்கை மேற்­கொண்டு வரு­பவர் ஜனா­தி­பதி டுவார்ட்டே.

போதைப் ­பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் நூற்­றுக்­க­ணக்­கானோர் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் ஏரா­ள­மா­னனோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இது தொடர்­பான அமெ­ரிக்கா முத­லான நாடுகள் மற்றும் மற்றும் ஐ.நாவின் கண்­ட­னங்­க­ளையும் ஜனா­தி­பதி ரொட்­றிகோ டுவார்டே புறக்­க­ணித்து வரு­கிறார்.

டாவோ நகர மேய­ராக தான் பதவி வகித்த காலத்தில், போதைப் ­பொருள் விற்­ப­னை­யா­ளர்­களைத் தேடி பொலி­ஸா­ருடன் இணைந்து முற்­று­கையில் ஈடு­பட்­ட­துடன் போதைப் பொருள் விற்­ப­னை­யாளர் ஒரு­வரை சுட்­டுக்­கொன்­ற­தா­கவும் சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி டுவார்ட்டே கூறி­யி­ருந்தார்.

இந்­நி­லையில், பறந்­து­ கொண்­டி­ருந்த ஹெலி­கொப்டர் ஒன்­றி­லி­ருந்து நபர் ஒரு­வரை வெளியே தள்­ளி­ய­தா­கவும் ஜனா­தி­பதி டுவார்ட்டே செவ்­வி­யொன்றில் கூறி­ய­தாக பிலிப்பைன்ஸ் பத்­தி­ரிகை ஒன்று செய்தி வெளி­யிட்­டது.

ஹெலி­கொப்டர் ஒன்றில் தான் பயணம் செய்­த ­போது அந்த ஹெலி­கொப்­டரை கடத்­து­வ­தற்கு முயன்ற நபர் ஒரு­வ­ரையே இவ்­வாறு தான் வெளியில் தள்­ளி­ய­தா­கவும் ஜனா­தி­பதி டுவார்ட்டே கூறி­யுள்ளார்.
தேவை­யானால் மீண்டும் அவ்­வாறு செய்­வ­தற்கும் தான் தயார் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

நீங்கள் ஊழல் பேர்­வ­ழி­யானால், உங்­களை ஹெலி­கொப்­டரில் ஏற்றி, தலை­நகர் மணி­லா­வுக்குச் செல்லும் வழயில் ஹெலி­கொப்­ட­ரி­லி­ருந்து வெளியில் தள்­ளுவேன் என அவர் கூறியதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்தது.

ஆனால், இவ்வாரம் மீண்டும் அவரிடம் இது குறித்து வினவப்பட்ட போது, அக்கூற்றை நிராகரிக்கும் வகையில் அவர் பதிலளித்துள்ளார்.