புறப்­படத் தயா­ரா­க­வி­ருந்த பய­ணிகள் விமா­னத்தில் மதுபோதையிலி­ருந்த விமானி பொலி­ஸாரால் கைது!!

576

புறப்­படத் தயா­ரா­க­வி­ருந்த பய­ணிகள் விமானம் ஒன்றில், மது­போ­தை­யி­லி­ருந்த விமானி கனே­டிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கன­டாவின் கல்­கெறி நக­ரி­லி­ருந்து மெக்­ஸி­கோவின் கன்குன் நக­ருக்குப் புறப்­ப­ட­வி­ருந்த சன்விங் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் விமா­னியே மது­போ­தை­யி­லி­ருந்த குற்­றச்­சாட்டில் கடந்த சனிக்­கி­ழமை கைது செய்ப்­பட்­டுள்ளார்.

37 வய­தான மிராஸ்லோவ் குரோனிச் எனும் இவ் வி­மானி, விசித்­தி­ர­மாக நடந்­து­கொள்­வ­தையும் பின்னர் உணர்­வி­ழந்­தி­ருப்­ப­தையும் விமான ஊழி­யர்கள் அவதானித்­தனர்.

இது தொடர்­பான அதி­கா­ரி­க­ளுக்கு ஊழி­யர்கள் தகவல் கொடுத்­த­தை­ய­டுத்து, அவ்­வி­மான அறை­யி­லி­ருந்து அவ்­வி­மா­னியை அதி­கா­ரிகள் வெளி­யேற்­றினர்.

அவ்­ வி­மானி கைது செய்­யப்­பட்டு இரு மணித்­தி­யா­லங்­களின் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­யின்­போது அவரின் உடலில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தை­விட 3 மடங்கு அல்­கஹோல் இருப்­பது தெரி­ய­வந்தது.

நூற்றுக்கும் அதிகமான பயணிகளைக் கொண்ட அவ் விமானத்தை பின்னர், வேறொரு விமானி மெக்ஸிகோவுக்கு செலுத்திச் சென்றார்.