சுமார் 13 லட்சத்து 60,000 ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை மலவாயிலில் வைத்து கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்று மாலை இந்தியா நோக்கி யூ.எல் 123 என்ற விமானத்தில் பயணிக்கவிருந்த 24 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து கைப்பெற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் 272 கிராம் எடையுடையவை.