இங்கிலாந்தில் சிறுவன் ஒருவன் வினோத உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளான். இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருகே உள்ள சல்போட் நகரில் வசிக்கும் சிறுவன் சாஷி தாஹிர்(6).
இவனுக்கு திடீரென்று விசித்திர உணவு பழக்கம் தொற்றிக்கொண்டது.
அதாவது கல், காகிதம், பாசி, ஜன்னல் அலங்கார திரை என கண்ணில் தெரிந்தவற்றை எல்லாம் கடித்து மென்று சாப்பிட ஆரம்பித்துள்ளான்.
குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்து அவனை கட்டுப்படுத்த முடியாமல் போகவே வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அஞ்சியுள்ளார்கள்.
இறுதி முடிவாக அறக்கட்டளை நிதி உதவியுடன் 7 லட்சம் செலவில் வீட்டின் ஒரு பகுதியில் சிறுவன் விளையாட செயற்கை கண்ணாடியை கொண்டு விசேஷ கூடத்தை உருவாக்கினார்கள்.
அதோடு பற்களால் கடிக்க முடியாதபடி வளைந்த வடிவிலான விளையாட்டு பொருட்களையும் வாங்கி வைத்துள்ளார்களாம்.
இதன்பின்பே சிறுவனின் பழக்கங்களில் மாற்றங்கள் தெரிந்ததாக சாஷியின் தயா ஹாரன் தெரிவித்துள்ளார்.