வவுனியா செட்டிகுளம் பேரூந்திலிருந்து கழன்று விழுந்த மிதிபலகை!!

1518

இன்று(17.01.2017) காலை வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து கங்கன்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது மிதிபலகை கழன்று விழுந்துள்ளது.

அதிகளவான பயணிகளை ஏற்றிய பேரூந்து வேகமாக பயணித்த போது வீதியிலுள்ள பள்ளம் ஒன்றில் இறங்கிய சந்தர்ப்பத்தில் மிதிபலகை கழன்றதாக தெரியவருகின்றது.

இவ் விபத்தில் மிதிபலகையில் பயணித்த மூவருக்கு சிறு கீறல் காயங்கள் ஏற்பட்டதுடன் பெரியளவில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.