வவுனியா கருங்காலிக்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடாசாலையில் கால்கோல் விழா!!

567

 
வவுனியா கருங்காலிக்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடாசாலையில் கால்கோல் விழாவும் தைப்பொங்கல் நிகழ்வும் நேற்று (16.01.2017) பாடசாலையின் அதிபர் திருமதி கி.புனிதவதி தலமையில் நடைபெற்றது.

இன்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்களான கேசவன் மற்றும் சிவராசா ஆகியோருடன் தொண்டு நிறுவனத்தைதை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்ரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொது அமைப்புக்களை சேர்த அங்கத்தவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வின் கதானாயகர்களான ஆண்டு ஒன்றிற்கு புதிதாக வந்தமாணவர்களை கௌரவப்படுத்தி மலர்மாலை அணிவித்து அழைத்துவந்து அவர்களுக்கான பரிசுப்பொருட்களும் பிரதம சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.