கொழும்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டம்!!

558

 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு அனுமதி கோரி இன்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், இலங்கையிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அம்பாறை, கல்முனை நகரில் இன்று காலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, கொழும்பு காலிமுகத்திடலிலும் வௌ்ளவத்தையிலும் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.